Publicidade

Salmos 8

கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,

பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது!

நீர் வானங்களுக்கு மேலாக

உமது மகிமையை வைத்திருக்கிறீர்.

2 உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க,

உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின்

உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக

வல்லமையை உறுதிப்படுத்தினீர்.

3 உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும்

அவற்றில் நீர் பதித்து வைத்த

சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி

நான் சிந்திக்கும்போது,

4 மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும்,

மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?

5 நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து,

அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.

6 உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்;

அனைத்தையும்:

7 எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும்

காட்டு மிருகங்களையும்

8 ஆகாயத்துப் பறவைகளையும்

கடல் மீன்களையும்

கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.

9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,

பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-