ஞானத்தைப் புறக்கணிக்காதிருக்க எச்சரிக்கை
20 ஞானம் வீதியிலே சத்தமிட்டு அழைக்கிறது,
பொது இடங்களில் தனது குரலை எழுப்புகிறது;
21 அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகிறது,
பட்டணத்தின் நுழைவாசல்களில் நின்று உரையாற்றுகிறது.
22 "அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்?
ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்?
மூடர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அறிவை வெறுப்பீர்கள்?
23 நீங்கள் எனது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுங்கள்!
என் சிந்தனைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்,
என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.