20 என் மகனே, நான் சொல்வதைக் கவனி;
நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.
21 அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே,
அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
22 அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்;
அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும்.