5 ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்;
எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
6 நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்;
அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
7 ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்;
உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
8 நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.