2 நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக1:2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக:
உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
3 உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்;
உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது;
ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.