Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 9:1-6

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

நமக்காகப் பிறந்த குழந்தை

1 ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாக துன்பப்படுத்தின ஆரம்ப காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் மத்திய தரைக் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள அந்நியமக்களுடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். 2 இருளில் நடக்கிற மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. 3 அந்த மக்களைப் பெருகச்செய்து, அதற்கு மகிழ்ச்சியையும் பெருகச்செய்தீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள். 4 மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்களுடைய தோளின்மேலிருந்த மரத்துண்டையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர். 5 தீவிரமாகப் போர்செய்கிற வீரர்களுடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்டஆடைகள் நெருப்பிற்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும். 6 நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    1 ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார்.

    2 இருளில் நடக்கும் மக்கள்

    ஒரு பேரொளியைக் கண்டார்கள்;

    மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல்

    வெளிச்சம் பிரகாசித்தது.

    3 நீர் நாட்டைப் பெருகச்செய்து

    அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர்.

    அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல,

    அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள்.

    கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல,

    அவர்கள் மகிழ்கிறார்கள்.

    4 மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல,

    நீர் அவர்களுக்குப் பாரமாயிருந்த

    நுகத்தை உடைத்துப்போட்டீர்.

    அவர்களுடைய தோள்களின் அழுத்திய பாரத்தையும்,

    அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலையும் அகற்றிப்போட்டீர்.

    5 ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும்,

    இரத்தத்தில் தோய்ந்த உடைகள் அனைத்தும்

    நெருப்புக்கு இரையாக

    சுட்டெரிக்கப்படும்.

    6 ஏனெனில், "நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார்,

    நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்,

    அரசாட்சி அவர் தோளின்மேல் இருக்கும்.

    அவர் அதிசயமான ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன்,

    நித்திய தகப்பன், சமாதானப்பிரபு"

    என அழைக்கப்படுவார்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.