21 "என் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தேன்;
நிர்வாணியாகவே திரும்புவேன்.
யெகோவா கொடுத்தார், யெகோவா எடுத்துக்கொண்டார்;
யெகோவாவின் பெயர் துதிக்கப்படுவதாக."
22 இவையெல்லாவற்றிலும் யோபு இறைவன் தனக்குத் தீங்கு செய்தார் எனக் குறைகூறி பாவம் செய்யவில்லை.