4 "நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்?
உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல்.
5 அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்?
நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே!
6 அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன?
அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
7 அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின;
இறைத்தூதர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனரே.
8 "கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது,
அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்?
9 நான் மேகத்தை அதற்கு உடையாக வைத்தபோதும்,
காரிருளினால் அதைச் சுற்றியபோதும்,
10 நான் அதற்கு எல்லைகளை அமைத்துத்
தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் வைத்தபோது நீ எங்கேயிருந்தாய்?
11 நான் அதனிடம், ‘நீ இதுவரை வா, மீறி வராதே;
உன் அகங்கார அலைகள் அடங்குவதாக’ என்று சொன்னபோது நீ எங்கேயிருந்தாய்?