8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;
அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,
அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
10 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;
வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.