யோபுவின் வார்த்தைகள்
1 அதற்கு யோபு மறுமொழியாக:
2 "ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்;
தேவனுக்கு முன்பாக மனிதன் நீதிமானாயிருப்பதெப்படி?
3 அவர் அவனுடன் வழக்காட விருப்பமாயிருந்தால்,
ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு பதில் சொல்லமாட்டானே.
4 அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்;
அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?