4 "நான் பூமிக்கு அஸ்திபாரம் போடும்போது நீ எங்கேயிருந்தாய்?
உனக்கு விளங்கினால் அதை எனக்குச் சொல்.
5 அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்?
நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே!
8 "கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது,
அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்?
12 "உன் வாழ்நாளில் காலைநேரத்திற்குக் கட்டளையிட்டு,
அதிகாலைப்பொழுதுக்கு அதின் இடத்தைக் காட்டினதுண்டோ?
31 "அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ?
மிருகசீரிட நட்சத்திரத்தைக் கட்டவிழ்க்க உன்னால் முடியுமோ?