யோபு பேசுதல்
1 அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
2 "நீ சொல்வது உண்மையென நான் அறிவேன்.
மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
3 இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால்,
அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
4 இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர்.
அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்?