12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே,
நீ வானத்திலிருந்து விழுந்தாயே!
ஒருகாலத்தில் நாடுகளை வீழ்த்திய நீ,
பூமிக்குத் தள்ளப்பட்டு விட்டாயே!
13 நீ உன் இருதயத்தில்,
"நான் வானத்திற்கு ஏறுவேன்;
இறைவனின் நட்சத்திரங்களுக்கு மேலாக
என் அரியணையை உயர்த்துவேன்.
பரிசுத்த மலையின் மிக உயரத்தில்,
சபைக்கூடும் மலையில் நான் அரியணையில் அமர்ந்திருப்பேன்.
14 மேகங்களின் மேலாக உயரத்தில் ஏறுவேன்;
மகா உன்னதமானவருக்கு ஒப்பாவேன்" என்று சொன்னாயே.
15 ஆனாலும் நீ பாதாளமட்டும் தாழ்த்தப்பட்டு,
படுகுழிக்குள் தள்ளப்பட்டாய்.