Publicidade

Isaías 12

துதியின் கீதங்கள்

1 அந்த நாளிலே நீ:

"யெகோவாவே உம்மைத் துதிப்பேன்.

என்னில் கோபமாயிருந்தபோதிலும்,

உமது கோபம் தணிந்து

என்னைத் தேற்றியிருக்கிறீர்.

2 நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு;

நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.

யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்;

அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்" என்று சொல்வாய்.

3 நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து

மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய்.

4 அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது:

"யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்;

அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள்,

அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள்.

5 யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்;

உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும்.

6 சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;

ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர்

மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்."

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-