Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 30:1-3,15

OTCVTAM Indian Tamil Contemporary Version

எகிப்துடன் பயனற்ற ஒப்பந்தம்

1 "பிடிவாதமுள்ள என் பிள்ளைகளுக்கு ஐயோ கேடு!"

என்று யெகோவா அறிவிக்கிறார்.

"ஏனெனில் அவர்கள் என்னுடையதல்லாத திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.

என் ஆவியானவரினாலன்றி உடன்படிக்கை செய்து,

பாவத்திற்குமேல் பாவத்தைக் குவிக்கிறார்கள்.

2 என்னிடம் அறிவுரை கேளாமல்

எகிப்திற்குப் போகிறார்கள்.

அவர்கள் பார்வோனின் பாதுகாப்பின்கீழ் உதவிகோரி,

எகிப்தின் நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள்.

3 ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்;

எகிப்தின் நிழல் உங்களுக்கு அவமானத்தைக் கொண்டுவரும்.

15 இஸ்ரயேலின் பரிசுத்தரும் ஆண்டவருமாகிய யெகோவா சொல்வது இதுவே:

"மனந்திரும்பி, என்னில் அமர்ந்திருந்தால் உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகும்;

அமைதியிலும் நம்பிக்கையிலுமே உங்களுக்கு பெலன் உண்டாகும்,

ஆனால் நீங்கள் அதில் ஒன்றையுமே ஏற்க விரும்பவில்லை.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    1 பாவத்தோடே பாவத்தைக் கூட்டுவதற்கு, என்னை அல்லாமல் ஆலோசனைசெய்து, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும், 2 என் வார்த்தையைக் கேட்காமல் பார்வோனின் பெலத்தினாலே பெலப்படவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்திற்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள மக்களுக்கு ஐயோ, என்று யெகோவா சொல்கிறார். 3 பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலில் ஒதுங்குவது உங்களுக்கு வெட்கமாகவும் இருக்கும். 15 நீங்கள் மனந்திரும்பி என்னில் அமர்ந்திருந்தால் காப்பாற்றப்படுவீர்கள்; அமைதியும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்கிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதில்லாமல்;

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.