10 இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்;
அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும்.
அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது,
அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது.
11 அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்:
அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி,
மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்;
அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.