3 நான் தாகமுள்ள நிலத்தில் தண்ணீரை ஊற்றுவேன்;
வறண்ட நிலத்தில் நீரோடைகளை உண்டாக்குவேன்.
உன் சந்ததியின்மேல் எனது ஆவியானவரையும்,
உன் பிள்ளைகள்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
4 அவர்கள் வெளிநிலத்திலுள்ள புல்லைப்போலவும்,
நீரோடைகளுக்கு அருகில் அலறிச்செடிகளைப் போலவும் விரைவாய் வளருவார்கள்.