Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 45:1-3

OTCVTAM Indian Tamil Contemporary Version

1 "அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது,

அவனுக்கு முன்பாக நாடுகளை அடக்கும்படியும்,

அரசர்களின் போர் ஆயுதங்களை களையப்பண்ணும்படியும்,

அவனுக்கு முன்பாக வாசல்கள் மூடாதபடி கதவுகள் திறக்கப் பண்ணும்படியும்

நான் அவனுடைய வலதுகையை தாங்கிப் பிடித்துக்கொண்டு,

அவனுக்குச் சொல்வதாவது:

2 நான் உனக்கு முன்சென்று,

மலைகளைத் தரைமட்டமாக்குவேன்;

நான் வெண்கலக் கதவுகளை உடைத்து,

இரும்புத் தாழ்ப்பாள்களையும் தகர்ப்பேன்.

3 நான் இருளில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும்,

மறைவிடங்களில் சேகரிக்கப்பட்ட புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்;

அப்பொழுது உன்னைப் பெயர்சொல்லி அழைத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா நானே

என்பதை நீ அறிந்துகொள்வாய்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    1 யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது: 2 நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். 3 உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா நானே என்று நீ அறியும்படிக்கு,

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.