9 "தன்னைப் படைத்தவருடன் வாதாடுபவனுக்கு ஐயோ, கேடு!
அவன் அவருக்கு முன்பாகத் தரையில் கிடக்கும் மண்ணோடுகளில் ஒரு ஓடுதானே.
களிமண் குயவனைப் பார்த்து, ‘நீ என்னத்தை உருவாக்குகிறாய்?’
எனக் கேட்கலாமோ?
நீ செய்யும் பொருள் உன்னிடம்,
‘உனக்குக் கைத்திறன் இல்லை’
என்று சொல்லலாமோ?