Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 50:4-9

OTCVTAM Indian Tamil Contemporary Version

4 இளைத்துப்போனவனை உற்சாகப்படுத்தும்படி, என்ன வார்த்தையை சொல்ல

நான் அறிந்திட ஆண்டவராகிய யெகோவா போதிக்கும் நாவை எனக்குக் கொடுத்திருக்கிறார்;

காலைதோறும் அவர் என்னை எழுப்புகிறார்,

ஒரு சீடனைப்போல் நான் கவனமாய் கேட்கும்படி

அவர் எனது செவிப் புலனைத் தட்டி எழுப்புகிறார்.

5 ஆண்டவராகிய யெகோவா எனது செவியைத் திறந்திருக்கிறார்;

நான் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை,

அவரைவிட்டு நான் விலகவுமில்லை.

6 என்னை அடிக்கிறவர்களுக்கு எனது முதுகைக் கொடுத்தேன்,

எனது தாடியைப் பிடுங்குகிறவர்களுக்கு என்னுடைய தாடைகளைக் கொடுத்தேன்;

அவர்கள் ஏளனம் செய்தபோதும்,

உமிழ்நீரைத் துப்பியபோதும் அதற்கு என் முகத்தை நான் மறைக்கவில்லை.

7 யெகோவாவாகிய ஆண்டவர் எனக்கு உதவி செய்கிறபடியால்,

நான் அவமானம் அடையமாட்டேன்.

ஆகையால் என் முகத்தைக் கற்பாறையைப்போல் வைத்துக்கொள்கிறேன்;

நான் வெட்கப்பட்டுப் போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

8 எனக்கு நீதி அளிக்கும் இறைவன் என் அருகில் இருக்கிறார்.

அப்படியிருக்க, எனக்கெதிராகக் குற்றச்சாட்டுகள் கொண்டுவருபவன் யார்?

நேருக்குநேர் சந்திப்போம்!

என்னைக் குற்றம் சாட்டுபவன் யார்?

அவன் எனக்கு முன்னே வரட்டும்.

9 ஆண்டவராகிய யெகோவாவே எனக்கு உதவி செய்கிறார்.

என்னைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவர்கள் யார்?

அவர்கள் எல்லோரும் பொலிவிழந்து

பூச்சிகள் அரித்த உடையைப்போல் இத்துப்போவார்கள்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    4 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். 5 யெகோவாவாகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. 6 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்திற்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7 யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படுவதில்லை; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன். 8 என்னை நீதிமானாக்குகிறவர் அருகிலிருக்கிறார்; என்னுடன் வழக்காடுகிறவன் யார்? ஏகமாக நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். 9 இதோ, யெகோவாவாகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லோரும் ஒரு ஆடையைப்போலப் பழையதாகிப் போவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.