4 உமக்குக் காத்திருப்போருக்காகச் செயலாற்றும் இறைவனைப்போன்ற,
வேறு ஒருவரை ஆதிமுதல் ஒருவரும் கேள்விப்பட்டதுமில்லை,
எந்த ஒரு கண்ணும் கண்டதுமில்லை,
எந்த ஒரு செவியும் கேட்டதுமில்லை.
5 உமது வழிகளை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியுடன் சரியானதைச் செய்வோருக்கு
நீர் உதவிசெய்ய வருகிறவர்.
ஆனால் நாங்கள் தொடர்ந்து உமக்கெதிராகப் பாவம் செய்தபோது,
நீர் கோபங்கொண்டீர்.
அப்படியானால் எப்படி நாம் காப்பாற்றப்படுவோம்?