15 உண்மையாகவே நாடுகள் வாளியிலிருந்து விழும்
தண்ணீர்த் துளியைப் போலிருக்கின்றன;
அவர்கள் தராசில் படிந்துள்ள தூசியைப்போல் கருதப்படுகிறார்கள்;
அவர் தீவுகளை தூசியைப்போல நிறுக்கிறார்.
17 எல்லா நாடுகளும் அவர் முன்னிலையில் ஒன்றுமில்லாதவர்கள்போல் இருக்கின்றனர்.
அவர்கள் அவரால் வெறுமையிலும் வெறுமையானவர்களாகவும்,
பெருமதியற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.