Pular para o conteúdo
Publicidade

சங்கீதங்கள் 11:4-7

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

4 யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;

யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது;

அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.

5 யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்;

துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

6 துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்;

நெருப்பும், கந்தகமும்,

அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

7 யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்;

அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;

    யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

    அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்;

    அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.

    5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்;

    வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ,

    அவர் மனதார வெறுக்கிறார்.

    6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும்,

    எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்;

    வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.

    7 யெகோவா நீதியுள்ளவர்,

    அவர் நீதியை நேசிக்கிறார்;

    நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.