Pular para o conteúdo
Publicidade

சங்கீதங்கள் 139:13-18

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

13 நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்;

என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். 14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்;

உமது செயல்கள் அதிசயமானவைகள்;

அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.

15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,

பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது,

என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை.

16 என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது;

என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்,

அவைகள் உருவேற்படும் நாட்களும்,

உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.

17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்;

அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.

18 அவைகளை நான் எண்ணப்போனால்,

மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    13 என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்;

    என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர்.

    14 நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால்,

    நான் உம்மைத் துதிக்கிறேன்;

    உமது செயல்கள் ஆச்சரியமானவை,

    நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன்.

    15 நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது,

    நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது,

    என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை.

    16 உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன;

    எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும்,

    அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.

    17 இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை!

    அவைகளின் தொகை எவ்வளவு பெரியது!

    18 நான் அவைகளை எண்ணப்போனால்,

    அவை மணலைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கும்;

    நான் விழிக்கும்போதோ இன்னும் உம்முடனேயே இருக்கிறேன்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.