23 அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு,
வானத்தின் கதவுகளைத் திறந்து,
24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து,
வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25 தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்;
அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.