17 ஆனால் யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பு
அவர்மேல் பயபக்தியாய் இருக்கிறவர்களோடும்,
அவருடைய நீதி அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளோடும் என்றைக்கும் இருக்கிறது;
18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு,
அவருடைய ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருப்பவர்கள் மேல்,
அவருடைய உடன்படிக்கையின் அன்பு நிலைத்திருக்கும்.