Pular para o conteúdo
Publicidade

சங்கீதம் 103:19-22

OTCVTAM Indian Tamil Contemporary Version

19 யெகோவா தமது சிங்காசனத்தை பரலோகத்தில் நிலைப்படுத்தியிருக்கிறார்;

அவருடைய அரசு அனைத்தையும் ஆளுகை செய்கிறது.

20 யெகோவாவினுடைய தூதர்களே,

அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து,

அவர் கட்டளையிடுகிறதைச் செய்கிற பலவான்களே, அவரைத் துதியுங்கள்.

21 பரலோகத்தில் உள்ள யெகோவாவினுடைய சேனைகளே,

அவருடைய திட்டத்தைச் செய்கிற அவருடைய பணியாளர்களே, அவரைத் துதியுங்கள்.

22 யெகோவா ஆளுகை செய்கிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய படைப்புகளே,

அவரைத் துதியுங்கள்.

என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    19 யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்;

    அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.

    20 யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு,

    அவருடைய வசனத்தின்படி செய்கிற

    பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே,

    அவரைத் துதியுங்கள்.

    21 யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து,

    அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே,

    அவரைப் போற்றுங்கள்.

    22 யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே,

    அவரைப் போற்றுங்கள்;

    என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.