39 யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்;
இரவிலே வெளிச்சம் கொடுப்பதற்கு நெருப்பையும் தந்தார்.
40 அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்;
பரலோகத்தின் அப்பத்தினால் அவர்களைத் திருப்தியாக்கினார்.
41 அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது;
அது ஒரு நதியைப்போல் பாலைவனத்தில் ஓடியது.