97 ஆ, உமது சட்டத்தை நான் எவ்வளவாய் நேசிக்கிறேன்!
நாள்முழுவதும் நான் அதை தியானிக்கிறேன்.
98 உமது கட்டளைகள் எப்பொழுதும் என்னுடன் இருப்பதால்,
அவை எனது பகைவரைப் பார்க்கிலும், என்னை ஞானியாக்கியது.
99 நான் உமது நியமங்களைத் தியானிப்பதினால்,
எனது ஆசிரியர்கள் எல்லோரைப் பார்க்கிலும் நான் அதிக அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
100 நான் உமது ஒழுங்குவிதிகளுக்குக் கீழ்ப்படிவதினால்,
முதியவர்களைவிட அதிக புரிந்துகொள்ளுதல் உள்ளவனாயிருக்கிறேன்.