1 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர்,
நீர் என்னை அறிந்துமிருக்கிறீர்.
2 நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்;
நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர்.
3 நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்;
என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் நீர் நன்கு அறிவீர்.
4 என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே,
யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர்.