1 வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன,
ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன.
2 அவைகள் நாள்தோறும் பேசுகின்றன;
இரவுதோறும் அறிவை வெளிப்படுத்துகின்றன.
3 அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன;
அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4 ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது;
அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன.
யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார்.
5 சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும்,
பந்தயத்திற்காக ஓட மகிழ்ச்சியுடனிருக்கும் விளையாட்டு வீரனைப்போலவும் இருக்கிறது.
6 அது வானங்களின் ஒரு முனையில் உதித்து,
மறுமுனைவரை சுற்றிவருகிறது.
அதின் வெப்பத்திற்குத் ஒன்றும் தப்புவதில்லை.
7 யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது,
அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது.
யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை,
அவை பேதையை ஞானியாக்குகின்றன.
8 யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை,
அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன.
யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை,
அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன.