9 யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது,
அது என்றென்றும் நிலைத்திருக்கிறது.
யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை,
அவை முற்றிலும் நீதியானவை.
10 அவை தங்கத்தைவிட,
சுத்தத் தங்கத்தைவிட மிகுந்த விலையுயர்ந்தவை.
அவை தேனைப் பார்க்கிலும்,
கூட்டிலிருந்து வடியும் தெளித்தேனைப் பார்க்கிலும் இனிமையானவை.
11 அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்;
அவைகளைக் கைக்கொள்வதால் மிகுந்த பலனுண்டு.