1 யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்!
எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.
2 அநேகர் என்னைக்குறித்து,
"இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்" என்று சொல்கிறார்கள்.3:2 எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது.
3 ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும்,
என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர்.
4 நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்;
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.
5 நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்;
யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன்.
6 எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும்,
நான் பயப்படமாட்டேன்.