4 "யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும்,
என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்;
என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும்.
5 என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்;
எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது;
பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும்
எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே.