2 ஆனால் நானோ, என் கால்கள் சறுக்கி,
என் காலடிகள் இடறி விழப்போனேன்.
3 பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்;
கொடியவர்களின் வளமான வாழ்வை நான் கண்டேன்.
16 இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள நான் முயன்றபோது,
அது எனக்குக் கடினமாய் இருந்தது.
17 ஆனால் நான் இறைவனின் பரிசுத்த இடத்திற்குள் நுழைந்த பின்புதான்,
நான் அவர்களுடைய இறுதிமுடிவை அறிந்துகொண்டேன்.