1 யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்?
எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ?
நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்?
2 எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்?
எவ்வளவு காலத்திற்கு அனுதினமும் என் இருதயத்தில் துக்கத்தோடு இருக்கவேண்டும்?
என் பகைவன் எவ்வளவு காலத்திற்கு என்னை வெற்றிகொள்வான்?