4 இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்;
மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்;
யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
5 இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில்
தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும்
விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார்.